வெள்ளி, 21 மார்ச், 2014

குக்கூக் குக்கூக் குயிலக்கா

வரிகள் - முல்லைச்செல்வன்
பாடியவர் - குட்டிக்கண்ணன்
இசை - தமிழீழ இசைக்குழு

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா


இது வேங்கைகள் வாழும் நாடு - அவர்
வீரத்தையே தினம் பாடு

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

அஞ்சல் அகற்றிட நஞ்சினை ஏந்தி
வெஞ்சமர் ஆடிடும் பிள்ளை - அவர்
வீரத்துக்கே இணையில்லை - இதை
நெஞ்சில் நினைந்து அஞ்சல் அகற்றி
கொஞ்சும் குரல்தனில் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இந்தியம் வந்திங்கு வஞ்சனை செய்தது
எங்கள் புலி பயந்தாரா - கொண்ட
இலட்சியத்தை மறந்தாரா - அவர்
சத்தியம் காக்க யுத்தம் புரிந்த
சங்கதியைத் தினம் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

காலைப் பொழுதினில் சோலை நடுவினில்
கானம் இசைத்திடும் குயிலக்கா - சுப
இராகம் இனிக்கும் உன் குரலக்கா
நாளை நமக்கொரு ஈழம் மலர்ந்திடும்
நாலு திசை எட்டப் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

சின்ன சின்ன கூடுகட்டி

குரல்கள் : மேஜர் சிட்டு, சுகுமார்

யாழ்ப்பாணத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறிய காலப்பகுதியில் வெளிவந்த பாடலிது.

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர் பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய
காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது -எங்கள்
தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது

வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள்
வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்
எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ்
ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்
வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்
பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் -எங்கள்
பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

புலியொரு காலமும் பணியாது

ரிகள்: பொன். கணேசமூர்த்தி
பாடியவர்: மேஜர் சிட்டு

இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது.


திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்
அலையாதிடுமோ கிடையாது -எங்கள்
நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை
எம்மை ஆளவென்று சதிபோடும்
முள்ளை மலரென்று கதைபேசும் -சில
மந்திகள் கொடிதாவும்
கொட்டிலுக்கு கூரையில்லை
கொண்டுவந்த தேதுமில்லை
கட்டுதற்கு ஆடையில்லை
மானமின்னும் சாகவில்லை.

பட்டினிக்கு வட்டியில்லை
வாவா... -இனி
குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்
பறிப்போம் திடமாய் நடைபோடு
மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி
மலந்திடும் கூத்தாடு
நாம் பிறந்த ஊருமில்லை
நட்டுவந்த தேதுமில்லை
ஆதரவுக்காருமில்லை
ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்
வாவா... -இனி
சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்
களத்தில் கயவரது தேரோட்டம்
மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி
மறுபடி கொடியேற்றும்
பள்ளியில்லை தேதியில்லை
சொல்லியள யாருமில்லை
உள்ளமின்றி மிச்சம் இல்லை
உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு
வாவா... -எங்கள்
ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா.

அடைக்கலம் தந்த வீடுகளே

குரல்: மலேசியா வாசுதேவன்
இசை: தேவேந்திரன்
இசைத்தட்டு: களத்தில் கேட்கும் கானங்கள்

இராணுவ முற்றுகைக்குள்ளும் சுற்றிவளைப்புக்குள்ளும் தங்களைப் பொத்திப் பாதுகாத்தவர்ககளிடமிருந்து விடைபெறும் போது புலிவீரன் பாடுவதாக அமைந்த பாடல்.

அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்
அன்புக்கு புலிகள் நன்றி

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்
கதவு திறந்தீர்களே -எம்மை
தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி
பார்க்க மறந்தீர்களே
பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..

எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி
உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்
தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்
நினைவு நூறல்லவா
நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...

பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த
இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்
முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்
சிறகால் மறைத்தீர்களே
சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே...

ந்தையர் ஆண்டதின் நாடாகும் -இதை

குரல் - பாடகர் சாந்தன்
எந்தையர் ஆண்டதின் நாடாகும் -இதை
எதிரிகள் ஆள்வது கேடாகும்
வந்துநீ களத்தினில் போராடு -அடிமை
வாழ்விலும் சாவது மேலாகும்

மீனினம் பாடிடும் தேனாடு -வரை
விண்முட்டும் சீர்திரு மலைநாடு
மானினம் வாழ்முல்லை வளக்காடு -வயல்
வன்னியும் எங்களின் மண்ணாகும்

முத்துக்கள் விளைகடல் மன்னாரும் -தம்பி
முத்தமிழ் புலமைசேர் யாழ்நாடும்
சொத்தென நிறைபுகழ் தமிழீழம் (2)-இதில்
தொல்லைகள் மேவினால் என்னாகும்

சிங்களர் காலடி படலாமோ -ஈழம்
சீர்கெட தமிழர்கள் விடலாமோ
சொந்த மண் அழிந்ததன் பின்னாலே(2) -பிறர்
சோற்றுக்கு வாழ்வதோ வாழ்வாகும்

கொலையோடு கொள்ளைகள் செய்வார்கள் -பெரும்
குண்டினை மழையென பெய்வார்கள்
தலையோடு மனைகளும் பாழாக(2) -தீயில்
கருக்குவர் ஒவ்வொரு நாளாக

தாயகம் மீட்டிட நீயோடு -பிரபா
தானையில் சேர்ந்தொரு புலியாகு
போயினி செருவினில் விளையாடு (2)-தமிழ்
பூத்திட புதியதோர் புறம்பாடு
புறம்பாடு.. புறம்பாடு.. புறம்பாடு....

போரென்று படைகொண்டு எல்லைக்குள்

பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல்.

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன்
புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்
நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்
தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்
மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல
மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக

தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை
செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள
மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி

மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா
மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக
தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது
தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக