வெள்ளி, 21 மார்ச், 2014

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர் வி

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடப்பட்ட பாடலிது.

ஒலிவடிவில் - வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்


வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்
வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற
வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர
பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக