வெள்ளி, 21 மார்ச், 2014

வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை

இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்றது.

பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன்.

வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை
வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை

இடிமின்னலோடு புயல் மழைபெய்திடும்
அடிவானில் விடிவெள்ளி முகம்தந்திடும்
தெருவோரம் மீதெங்கள் உயிர்போவதோ -எம்
தமிழீழத் திசையாவும் சிவப்பாவதோ?

கோணமாமலை மீது துயர் மூண்டது
கொடியோரின் படைகள் அங்கு வந்தது
எரிகின்ற பெருந்தீயில் உடல் வெந்தது
உயிர் தின்னும் பேய்கள் நிலைகொண்டது.

நாம்வாழ்ந்த நிலமெங்கும் விசப்புற்றுக்கள்
நடமாட வழியில்லை முட்பற்றைகள்
இசையோடு தமிழ்பாடும் ஒலியில்லையே
விடிகாலைப் பொழுதங்கு இனிது இல்லையே

விழிசிந்தி நின்றோமே ஓர்விடை வந்ததோ
மொழிசொல்ல முடியாத பெருந்துயர் நின்றதோ
எழுவானில் திசைவாழ எழுந்தாடுவோம்
பொழுதோடு மண்மீது கொடி ஏற்றுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக